பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே புலைய மங்கையர் புழுநெறி அளற்றில் என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த் தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே