பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம் போந்தவான் முடியதாங் கதன்மேல் மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல் என்வணச் சோதிக் கொடிபர நாதாந் தத்திலே இலங்கிய ததன்மேல் தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத் தழுவினன் திருவடி நிலையே