பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும் தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய் மன்வண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும் மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி