பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக் கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர் மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும் மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே