பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் புண்ணியா கண்ணினுள் மணியே கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்பருங் கருணையங் கடலே தெய்வமே எனநான் நின்னையே கருதித் திருப்பணி புரிந்திருக் கின்றேன் மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்