பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப் புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல் உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில் ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன் ஐய நும்மடிக் காட்செயல் உடையேன் ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின் றீரே