பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச் செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே