பாடல் எண் :605
பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார்
நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ
பாடல் எண் :2594
பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண் போகாத நாளும் விடயம்
புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும் புந்திதள ராத நிலையும்
எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை என்றும்மற வாத நெறியும்
இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ் ஏழையேற் கருள்செய் கண்டாய்
கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு கோமளத் தெய்வ மலரே
கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணிவி ளக்கே
ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே
பாடல் எண் :3023
பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ
பாடல் எண் :3174
பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே
பாடல் எண் :4576
பொய்யாத புண்ணிய ஸோதி - எல்லாப்
பொருளும் விளங்கப் புணர்த்திய ஸோதி
நையா தருள்செய்த ஸோதி - ஒரு
நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஸோதி சிவசிவ
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.