பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும் கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன் ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே
பொய்யாம் உலக நடைநின்று சஞ்சலம் பொங்கமுக்கண் ஐயாஎன் உள்ளம் அழலார் மெழுகொத் தழிகின்றதால் பையார் அரவ மதிச்சடை யாய்செம் பவளநிறச் செய்யாய் எனக்கருள் செய்யாய் எனில்என்ன செய்குவனே