பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர் ஐய நும்அடி அன்றிஓர் துணையும் அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல் உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன் ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே