பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில் வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என் கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே