பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன் விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே