பொய்யே புலம்பிப் புழுத்தலை நாயின் புறத்திலுற்றேன் மெய்யே உரைக்கும்நின் அன்பர்தம் சார்பை விரும்புகிலேன் பையேல் அரவனை யேன்பிழை நோக்கிப் பராமுகம்நீ செய்யேல் வயித்திய நாதா அமரர் சிகாமணியே