பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய்யுல காசைசற் றறியேன் நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் கருதினேன் கருத்தினை முடிக்கச் செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ தெய்வமே என்றிருக் கின்றேன்