பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம் கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே