பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர் புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர் கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர் ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால் அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர் மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம் மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே