பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் புகலுவதென் நாடொறுநும் புந்தியிற்கண் டதுவே மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே