பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள் புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம் தேடியும் காண்கிலாச் சிவமே மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே அம்மையே அப்பனே அபயம்