பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம் புகன்றபோ தாந்த நாதாந்தம் தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந் தத்தினும் தித்திக்கும் தேனே மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும் மாபெருங் கருணையா ரமுதே அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே அம்மையே அப்பனே அபயம் அருட்பெருஞ்சோதி அபயம் நேரிசை வெண்பா