பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர் திருத்தம்உற அருகணைந்து கைபிடித்தார் நானும் தெய்வமலர் அடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே வருத்தம்உறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக் கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி