பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம் போக்கி நின்றனை போனது போக வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே திருந்தி நின்றநம் முவர்தம் பதிகச் செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத் தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே