பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண் அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும் தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே