பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே புத்தமு தேகுணப் பொருப்பே இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே இன்பமே என்பெருந் துணையே அருள்எலாம் திரண்ட ஒருசிவ முர்த்தி அண்ணலே நின்அடிக் கபயம் மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கெலாம் மாற்றிஆண் டருளே