பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப் புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச் செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச் செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும் ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே