பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பேர் அறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே