பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே