பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும் கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச் சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண் நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும் நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே