பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல் மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல் நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே