பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம் பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும் தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே முழுதும்ஆ னான்என ஆகம வேத முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே
பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற தூயவன் ஆனேன்என்று உந்தீபற