போகங்கொண் டார்த்த அருளார் அமுதப் புணர்முலையைப் பாகங்கொண் டார்த்த பரம்பொரு ளேநின் பதநினையா வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ் வேழை மெலிந்துமிகச் சோகங்கொண் டார்த்துநிற் கின்றேன் அருளத் தொடங்குகவே