போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன் ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக் காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக் களித்த பாதகத்தொழிற் கடையேன் மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்தருள் எனையே