போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள் ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப் பாகின் தணிச்சுவையிற் பாங்காரும் நின்அருளை ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே