போதஆ னந்த போகமே என்னைப் புறம்பிட நினைத்திடேல் போற்றி சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என் சிறுமைதீர்த் தருளுக போற்றி பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன் பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால் வேறெனக் கிலைஅருள் போற்றி