போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும் புண்ணிய நின்திரு அடிக்கே யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன் யாதுநின் திருஉளம் அறியேன் தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும் செய்திடா திருப்பையோ சிறியோன் ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி ஈவையோ துணிகைவாழ் இறையே