போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள் ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம் கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு