போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய் வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர் மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே