போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர் அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச் செவ்வண்ணத் தானைத் தெரிந்து