போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம் சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே