மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன் அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே