மஞ்சுபடும் செஞ்சடில வள்ளலே உள்ளுகின்றோர் உஞ்சுபடும் வண்ணம்அருள் ஒற்றியூர் உத்தமனே நஞ்சுபடும் கண்டம்உடை நம்பரனே வன்துயரால் பஞ்சுபடும் பாடுபடும் பாவிமுகம் பாராயோ