மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால் எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும் வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும் அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே