மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு வள்ளலே நின்திரு வரவுக் கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும்வே றெண்ணிய துண்டோ நடம்புரி பாதம் அறியநான் அறியேன் நான்செயும் வகையினி நன்றே திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே