மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன் உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம் அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன் கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே