மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல் இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர் தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில் தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின் றீரே