மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா னடையிற் கனிவாற் பணியென்றே யருளீ ருரியீ ருடையென்றேன் கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென் னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ