மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக் கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை விட்டகன்று கருமமல போதம் யாவும் விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச் சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும் சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே