மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம் இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற் கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும் கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம் பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே