மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேனின் குணங்கொண் மொழிகேட் டோ ரளவு குறைந்த குயிலாம் பதியென்றா ரணங்கின் மறையூ ராமென்றே னஃதன் றருளோத் தூரிஃது மிணங்க வுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ