மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே