மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி